மட்டக்களப்பில் ஒரு நாளைக்குள் இருபெண்களின் கழுத்தில் இருந்த ஆபரணங்களை திருடிய திருடன் ஏறாவூரில் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.
வழமையாக மாலை நேரங்கள் மட்டக்களப்பு நகரிலிருந்து உள்பாதையினூடாக கிராமங்களினூடாக சென்று ஏறாவூர் நகரை அடையும் போது வழியில் எதிர்படும் பெண்களின் தங்க ஆபரணங்களை பறிக்க கழுத்திடன் இழுத்து பல பெண்கள் காயங்களுடன் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட சம்பவங்கள்,
நேற்றுமாலை சுவிஸ்கிராமத்தில் ஒரு பெண்ணின் கழுத்தில் இருந்த தங்க மாலை பறிக்கப்பட்டு அப்படியே தப்பிச்சென்று தளவாயை அடைந்து அங்கிருந்து ஏறாவூர் நகர் பகுதியில் வயோதிப பெண்ணிண் கழுத்தில் இருந்த மாலையை பறித்தெடுத்து சென்ற நபர் விபரம் இன்று காலை தெரிய வந்ததனை தொடர்ந்து ஏறாவூர் பொலிஸாரினால் கைதுசெய்யப்பட்டுள்ளார்,
No comments: