(சுபா)
மட்டக்களப்பு செங்கலடி பிரதேச பிரிவிற்குட்பட்ட கித்துள் ஆற்றில் 17 வயது இளைஞன் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
குறித்த சடலம் ஏறாவூரைச் சேர்த்த மொகமட் அசான் எனும் இளைஞர் என இனங்காணப்பட்டுள்ளதாக தெரியவருகிறது. இவர் தனது குடும்பத்துடன் விடுமுறையை கழிக்க சென்ற போதே இவ்வாறு ஆற்றில் மூழ்கி உயிரிழந்துள்ளார் என தெரியவருகிறது.
இச் சம்பவம் தொடர்பாக கரடியனாறு பொலிஸார் விசாரணை மேற்கொண்டு வருவதுடன், சடலம் செங்கலடி வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாக எமது ஊடகவியலாளர் தெரிவித்தார்.
No comments: