News Just In

1/20/2020 07:57:00 AM

திருப்பழுகாமத்தில் நடைபெற்ற பொங்கல் விழா

மட்டக்களப்பு திருப்பழுகாமம் இந்து கலா மன்றத்தின் 45வது ஆண்டு நிறைவு விழாவும், பொங்கல் விழாவும் இன்று (19.01.2020) பழுகாமம் திரௌபதையம்மன் ஆலய முன்றலில் தலைவர் அ.ஜீவரெத்திம் தலைமையில் நடைபெற்றது.

45வது ஆண்டு நிறைவை முன்னிட்டு பஜனைபாடல் திரட்டு நூலொன்றும் வெளியீட்டு வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.மாணவர்களுக்கான பரிசளிப்பு விழா, கலை நிகழ்வுகள் என்பவும் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் ஞா.சிறிநேசன், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பா.அரியநேந்திரன், மற்றும் இராசமாணிக்கம் மக்கள் அமைப்பின் தவிசாளர் இரா.சாணக்கியன், முன்னாள் மாகாண சபை உறுப்பினர்கள், பிரதேச சபை உறுப்பினர்கள் என பலரும் கலந்து சிறப்பித்தனர்.





No comments: