News Just In

1/20/2020 08:20:00 AM

மட்டு மாநகர பிரதேசத்தில் வீதியில் திரியும் கட்டாக்காலிகள் பிடிக்கப்பட்டால் உரிமையாளரிடம் ஒப்படைக்கப்பட மாட்டாது!


மட்டக்களப்பு மாநகர பிரதேச வீதிகளில் திரியும் கட்டாக்காலி கால்நடைகள் பொதுமக்களின் போக்குவரத்திற்கு இடைஞ்சல் விளைவிப்பதுடன், விபத்தை ஏற்படுத்தி உயிரிழப்பினையும் உண்டுபண்ணுவதாக உள்ளது என போக்குவரத்து பொலிஸாரினால் மாநகர சபைக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனை அடுத்து கட்டாக் காலி கால்நடைகளை வீதியில் அலையவிடாது வீட்டு வளாகத்தினுள் வளர்க்குமாறு உரிமையாளர்கள் கோரப்படுவதுடன். அவ்வாறு வீதியில் திரியும் கால்நடைகள் மாநகர சபையினரால் பிடிக்கப்பட்டு தண்டப்பணம் அறவிடப்படும்.

தண்டப்பணம் அறவிடப்பட்ட பின்னும் குறித்த கால்நடைகள் வீதியில் மீண்டும் பிடிபட்டால் எக்காரணம் கொண்டும் உரிமையாளரிடம் ஒப்படைக்கப்படமாட்டாது, அவை அரச கால்நடை பண்ணைக்கு அனுப்பி வைக்கப்படும் என மட்டு மாநகர சபை அறியத்தருகிறது.
 

No comments: