News Just In

1/20/2020 11:25:00 AM

பொத்துவில் பகுதியில் மீன் பிடிக்கச் சென்று குளத்தில் மூழ்கிய இருவரில் ஒருவர் பலி..!


பொத்துவில், ரொட்டேவௌ குளத்தில் மீன்பிடித்துக் கொண்டிருந்த ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ள சம்பவம் அப்பகுதியினரை பெரிதும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

இச்சம்பவம் நேற்று (19.01.2020) பிற்பகல் இடம்பெற்றுள்ளது. குறித்த குளத்தில் இருவர் மீன்பிடித்த கொண்டிருந்த நிலையில் இருவரும் நீரில் முழ்கியுள்ளனர்.

இதனையடுத்து இருவரையும் காப்பாற்றி பொத்துவில் வைத்தியசாலையில் அனுமதித்த நிலையியல், இருவரில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இவ்வாறு உயிரிழந்தவர், 30 வயதுடைய பொத்துவில் பகுதியில் வசிப்பவரென தெரியவந்துள்ளது.

சம்பவம் தொடர்பில் பொத்துவில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

No comments: