நேற்று மாலை இளைஞன் ஒருவர் செலுத்திய மோட்டார் வண்டி வேக கட்டுப்பாட்டை இழந்து மின்சார கம்பத்துடன் மோதி விபத்துக்குளானதில் குறித்த இளைஞன் பலியாகியுள்ளார்.குறித்த விபத்து முல்லைத்தீவு மூங்கிலாறு பகுதியில் இடம்பெற்றுள்ளது. விபத்தில் படுகாயமடைந்த இளைஞன் புதுக்குடியிருப்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் பலியாகியுள்ளார்.
உடையார்கட்டு மூங்கிலாறு தெற்கு எனும் முகவரியை சேர்ந்த ஆனந்தராசா பிரசன்னா (வயது 24) என்ற பேராதனியா பல்கலைக்கழக முகாமைத்துவ பீடத்திற்கு தெரிவானவரே இவ்வாறு விபத்தில் பலியாகியுள்ளார் .
புதுக்குடியிருப்பு பொலிஸார் விபத்து தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர் .
No comments: