News Just In

1/13/2020 08:11:00 AM

பிரதேச செயலகங்களில் அபிவிருத்தி உத்தியோகத்தராக பணியாற்றும் பிக்குமாருக்கு ஆசிரியர் நியமனம்

பிரதேச செயலகங்களில் அபிவிருத்தி உத்தியோகத்தர்களாக நியமிக்கப்பட்டுள்ள பிக்குமாருக்கு ஆசிரியர் தொழில் வாய்ப்புக்களை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

வாத்துவ, மொள்ளிகொட, வஜிரகோன் மஹா விஹாரையில் இடம்பெற்ற சமய நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய பிரதமர் இந்த வியத்தை குறிப்பிட்டதுடன் .இது தொடர்பில் அமைச்சரவைக்கு ஆவணம் சமர்பிக்கப்பட்டிருப்பதாகவும் கூறினார்.

அமைச்சரவை ஆவணத்திற்கு அமைச்சரவை சாதகமான தீர்மானமொன்றை எடுத்திருப்பதாகவும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மேலும் தெரிவித்தார்.

அமைச்சர் மஹிந்த அமரவீர இராஜாங்க அமைச்சர்கள் உள்ளிட்ட பலர் இந்த நிகழ்வில் கலந்துகொண்டனர்.

No comments: