News Just In

1/11/2020 11:20:00 AM

உக்ரைன் பயணிகள் விமானத்தை சுட்டு வீழ்த்தியதை ஏற்றுக்கொண்டது ஈரான்

ஈரான் தலைநகர் டெஹ்ரானில் உள்ள இமாம் கோமெய்னி சர்வதேச விமான நிலையத்தில் இருந்து 176 பயணிகளுடன், உக்ரைன் தலைநகர் கீவுக்கு புறப்பட்டு சென்ற போயிங் 737 ரக விமானம் புறப்பட்ட சில நிமிடங்களிலேயே விபத்துக்குள்ளானது.

இந்நிலையில் தமது ஏவுகணை தாக்குதலின் மூலமாகவே உக்ரைனின் பயணிகள் விமானத்தை தவறுதலாக சுட்டு வீழ்த்தியதை ஈரான் ஏற்றுக்கொண்டுள்ளது. ஈரானின் வெளிவிவகார அமைச்சர் முகமட் ஜாவட் ஜரீவ் இதனை டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.

மேலும் மேற்படி விபத்து அறியாமல் இடம்பெற்றதெனவும் ஈரான் தெரிவித்துள்ளது. இதேவேளை, தமது நாட்டு ஏவுகணை தாக்கி உக்ரேனிய விமானம் விழுந்து நொறுங்கவில்லை என்று ஈரானிய பொது விமானப் போக்குவரத்து ஆணையம் நேற்றைய தினம் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை ஈரானிய இராணுவம் ஏவுகணையொன்று விமானத்தை தாக்கியதாக தெரிவிக்கும் அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளதுடன், உயிரிழந்தவர்களின் உறவினர்களிற்கு அனுதாபங்களையும் வெளியிட்டுள்ளது.

No comments: