வரலாற்று முக்கியத்துவமிக்க களனி ரஜமகா விகாரையின் வருடாந்த துருத்து மகா பெரஹரா ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்களின் தலைமையில் நேற்று முன்தினம் (09) இரவு இடம்பெற்றது.
சமயக் கிரியைகளை தொடர்ந்து, புனித தந்தம் அடங்கிய பேழையை ஜனாதிபதி அவர்கள் புனித தந்தத்தை சுமந்துவரும் யானையின் மீது வைத்தார்.
சமல் ராஜபக்ஷ, பிரசன்ன ரணதுங்க, இசுற ஜயக்கொடி, இந்திக்க அனுருத்த மற்றும் பிரசன்ன ரணவீர, எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச ஆகியோரும் இந்த சமயக் கிரியைகளில் பங்குபற்றினர்.
களனி ரஜமகா விகாராதிபதி கலாநிதி சங்கைக்குரிய கொள்ளுபிட்டியே மஹிந்த சங்க ரக்கித தேரரின் அனுசாசன உரை இடம்பெற்றதுடன், சமயக் கிரியைகளில் விகாரையின் நிர்வாக சபைத் தலைவர் வைத்தியர் சமன் வீரசிங்க உள்ளிட்டோரும் கலந்துகொண்டனர்.
1/11/2020 10:34:00 AM
ஜனாதிபதி தலைமையில் இடம்பெற்ற களனி துருத்து பெரஹரா
Subscribe to:
Post Comments (Atom)






No comments: