நாட்டினை அழகுபடுத்த முன்வந்து செயற்படும் இளைஞர்களின் தேசிய உணர்வுக்கு தமது அரசாங்கம் தலைவணங்குவதாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
நேற்று முன்தினம் அலரிமாளிகையில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு கூறினார்.
வெளிநாட்டு உதவிகளை எதிர்பார்த்துக் காத்திருக்காமல் நேர்மையான அணுகுமுறை மூலம் நாட்டினை அழகுபடுத்த இளைஞர்கள் முன்வந்து செயற்படுவதை எமது அரசு பாராட்டுகிறது. கடந்த அரசாங்கத்தின் இளைஞர் விவகார அமைச்சர் இளைஞர்களுக்கு எவ்வித உத்வேகத்தையும் கொடுக்காது அவர்களை விமர்சனம் செய்துகொண்டிருந்தார்.
வரலாற்றில் ஒவ்வொரு அரசாங்கமும் அதன் பிரச்சினைகளை விற்பனை செய்துக்கொண்டே இருந்ததே தவிர பிரச்சினைகளுக்கான தீர்வுகள் காணப்படவில்லை. அதனால்தான் நாம் 30 வருட யுத்தத்திற்கும் முகங்கொடுத்தோம்.
நாங்கள ராஜபக்ஷர்கள் அவ்வாறு இல்லாமல் பிரச்சினைகளுக்கு தீர்வு காணுபவர்களாகவும் சவால்களில் வெற்றிபெறுபவர்களாகவுமே இருந்துள்ளோம் என்றார்.
1/11/2020 12:09:00 PM
நாட்டை அழகாக்கும் இளைஞர்களின் தேசிய உணர்வுக்கு அரசாங்கம் தலைவணங்குகிறது
Subscribe to:
Post Comments (Atom)

No comments: