News Just In

1/12/2020 09:12:00 AM

கிழக்குப் பல்கலைக்கழக நுண்கலைத்துறை நடன இசை ஆற்றுகை நிகழ்வு

கிழக்குப் பல்கலைக்கழக நுண்கலைத்துறையில் 06.01.2020 அன்று காலை 9.00 மணி தொடக்கம் நண்பகல் 12.00 மணி வரை சமகால நடன, இசை தொடர்பான கருத்துரையும், பிற்பகல் 03.00 மணி தொடக்கம் மாலை 6.00 மணி வரை "ஆய்வை மையப்படுத்திய ஆற்றுகை கலைகளும், ஆற்றுகை நிகழ்வும்" எனும் தலைப்பில்

இசை நடன ஆற்றுகையும் கிழக்குப் பல்கலைக்கழக நுண்கலைத்துறைத் தலைவர் திரு.சு.சந்திரகுமார் அவர்களின் தலைமையில் கலைகலாசார கேட்போர் கூடத்தில் பல்கலைக்கழக விரிவுரையாளர்கள், மாணவர்கள், வெளி சமூகத்தினர் ஒன்றிணைய சிறப்பாக நடைபெற்றது.

இந்நிகழ்வில் சிறப்பு அதிதியாக கலந்து சிறப்பித்தவர் கலை கலாசாரபீட பீடாதிபதி கலாநிதி ஜெ.கென்னடி ஆவார். இந்நிகழ்விற்கான வளவாளர்களாக அமெரிக்க நாட்டைச் சேர்ந்த ஆற்றுகைக் கலைஞர் யாழினி டிரீம், ஜேர்மன் நாட்டைச் சேர்ந்த இசைக் கலைஞரான மா.ஜோகேஸ்வரன் ஆகியோர் செயற்பட்டதுடன், இவர்களுடன் அமெரிக்க குரலிசைக் கலைஞர் ஜென்டொக் அவர்களும் இணைந்துக் கொண்டார்.

இவ் ஆற்றுகை நிகழ்வானது மட்டக்களப்பு மூன்றாவது கண் உள்ளுர் அறிவுதிறன் செய்பாட்டுக் குழுவின் ஏற்பாட்டில், மூன்று நாள் பயிற்சி பட்டறையின் மூலம் உருவான படைப்பாக்கம், புதிதளித்தல் ஆகியவற்றை மையப்படுத்திய ஆற்றுகை வடிவங்களின் வடிவமைப்பே நிகழ்த்தப்பட்டது.

இதனை இணைப்பாக்கம் செய்தவர் கிழக்குப் பல்கலைக்கழக நுண்கலைத்துறையின் முதுநிலை விரிவுரையாளர் கலாநிதி சி.ஜெயசங்கர் ஆவார்.

இவ் இசை நடன நிகழ்வில் நுண்கலைத்துறைத் தலைவர் சு.சந்திரகுமார், து.கௌரீஸ்வரன், துஷ்யந்தி சத்தியஜித், பிரியா இளங்கோ, எஸ்.சோபிதர், எஸ்.சஜித். என்.ருபநீதன், கே.கோகுலராஜ், எஸ்.நரேன், என்.மேகனராஜ், இ.குகநாதன், எஸ்.கிளிப்டன், நியூட்டன் செல்லர். எப்.ஜீட் திலீபன், எஸ்.சிந்து உஷா, எஸ்.சுபானி, வை.சிவஸ்திகா ஆகியோர் ஆற்றுகையாளர்களாகச் செயற்பட்டனர்.

No comments: