News Just In

1/12/2020 08:26:00 AM

கொழும்பு பல்கலைக்கழக மாணவர்கள் 12 பேருக்கு விளக்கமறியல்

கொழும்பு பல்கலைக்கழக மாணவர் ஒருவர் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட 12 கொழும்பு பல்கலைக்கழக மாணவர்களையும் எதிர்வரும் 13ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இரு மாணவ குழுக்களுக்கிடையில் கடந்த 8ஆம் திகதி இடம்பெற்ற மோதலையடுத்து இருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர். இச்சம்பவம் தொடர்பாக 12 பேர் கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

குறித்த மாணவர்கள் புதுக்கடை நீதிவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டதையடுத்து 12 மாணவர்களையும் 13ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிவான் உத்தரவிட்டார்.

No comments: