
(படங்கள்-விதுஷன்)
மட்டக்களப்பு, தாழங்குடா ஸ்ரீ விநாயகர் மகா வித்தியாலய வருடாந்த இல்ல விளையாட்டுப் போட்டி நிகழ்வுகள் திங்கட்கிழமை(27) ஸீப்ரா விளையாட்டு மைதானத்தில் பாடசாலை அதிபர் சா.மதிசுதன் தலைமையில் நடைபெற்றது.
பிரதம அதிதியாக மட்டக்களப்பு பாராளுமன்ற உறுப்பினர் ஞா.ஸ்ரீநேசன் அவர்களும், சிறப்பு அதிதியாக திருமதி சு.குலேந்திரகுமார், கௌரவ அதிதிகளாக கோட்டக்கல்விப் பணிப்பாளர் இ.ஜோன்பிரபாகரன், உதவிக்கல்விப் பணிப்பாளர் வ.லவக்குமார், பாடசாலை மேம்பாட்டுத்திட்ட இணைப்பாளர் பொ.செல்வநாயகம், சேவைக்கால ஆசிரிய ஆலோசகர் க.ரவீந்திரன்,
விசேட அதிதிகளாக மண்முனைப்பற்று பிரதேசசபை உறுப்பினர் ஆ.சிவலிங்கம், பாடசாலை அபிவிருத்திச் சங்க செயலாளர் இ.ஸ்ரீஸ்கந்தராசா, ஸீப்ரா விளையாட்டுக்கழகத் தலைவர் லி.நிரஞ்சன் ஆகியோர் கலந்துகொண்டனர்.
சிறப்பாக இடம்பெற்ற பாடசாலையின் வருடாந்த இல்ல விளையாட்டு போட்டி நிகழ்வில் அதிதிகள் வரவேற்பு, விளையாட்டு சுடர் ஏற்றுதல், அணிநடை, உடற்பயிற்சி, மாறுவேடப் போட்டி, மைதான விளையாட்டுகள், அதிதிகள் உரை, பரிசு வழங்குதல் ஆகிய நிகழ்வுகள் நடைபெற்றன.






































No comments: