கிழக்கு பல்கலைக்கழகத்தில் கலைப்பிரிவு முதலாம் அரையாண்டில் கற்கும் செங்கலடி பிரதேச மாணவன் சிவகுமார் பிரவின் தனது சிரேஷ்ட மாணவர்களால் இன்று பல்கலையில் வைத்து தாக்கப்பட்டு மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுளார்.
குறித்த பல்கலைகழக கலைப்பீட முதலாம் ஆண்டு மாணவர்கள் வன்முறையற்ற மாணவர் அமைப்பு என பகிடிவதையை இல்லாது ஒழிக்கும் ஒர் அமைப்பை உருவாக்கி செயற்படுத்தி வந்துள்ளனர்.
இந்த நிலையில் சம்பவதினமான இன்று (திங்கட்கிழமை) பகல் வன்முறையற்ற மாணவர் அமைப்பை ஆரம்பித்த முதலாம் ஆண்டு மாணவர் இருவர் மீது இரண்டாம் ஆண்டு மாணவர்கள் குழுவினர் தாக்குதல் மேற்கொண்டுள்ளனர்.
இந்த தாக்குதலில் முதலாம் ஆண்டு மாணவர்கள் இருவர் படுகாயமடைந்தனர் இதன்போது வைத்தியசாலைக்கு கொண்டு செல்வதற்காக சென்ற அம்புயூலன்ஸ் வண்டியை பல்கலைக்கழக வளாகத்திற்குள் உள்நுழைய விடாமல் மாணவர்கள் தடுத்துள்ளனர்.
இதன் பின்னர் பல்கலைக்கழக பின்வழியால் அம்புயூலனஸ் சென்று படுகாயடைந்த இருவரையும் ஏற்றிக் கொண்டு வளாகத்தை விட்டு வெளியேற விடாமல் தாக்குதல் மேற்கொண்ட மாணவர்கள் தடுத்துள்ளதாகவும் அதன்பின்னர் காயப்பட்ட இரு மாணவர்களையும் அம்புயூலனஸ் வண்டியில் எடுத்து கொண்டு மட்டு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இதனையடுத்து பல்கலைக்கழகவளாகத்தில் சிலமணிநேரம் பதற்ற நிலமை ஏற்பட்டமை குறிப்பிடத்தக்கது
கிழக்குப் பல்கலைக்கழகத்தின் வந்தாறுமூலை வளாகத்தில் இடம்பெற்ற தாக்குதல் சம்பவத்தை அடுத்து முதலாம் வருட மற்றும் இரண்டாம் வருட மாணவர்களுக்கான கல்வி நடவடிக்கைகள் கால வரையறை இன்றி மூடப்பட்டுள்ளதுஇதன் பின்னர் பல்கலைக்கழக பின்வழியால் அம்புயூலனஸ் சென்று படுகாயடைந்த இருவரையும் ஏற்றிக் கொண்டு வளாகத்தை விட்டு வெளியேற விடாமல் தாக்குதல் மேற்கொண்ட மாணவர்கள் தடுத்துள்ளதாகவும் அதன்பின்னர் காயப்பட்ட இரு மாணவர்களையும் அம்புயூலனஸ் வண்டியில் எடுத்து கொண்டு மட்டு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இதனையடுத்து பல்கலைக்கழகவளாகத்தில் சிலமணிநேரம் பதற்ற நிலமை ஏற்பட்டமை குறிப்பிடத்தக்கது
No comments: