News Just In

1/26/2020 11:22:00 AM

இலங்கையில் கொரோனா வைரஸ் தாக்கத்துக்கு உள்ளாகியதாக கூறப்பட்டவர்களின் அறிக்கை வெளியாகியது


கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனரா என்ற சந்கேதத்தின் பேரில் அங்கொடை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நான்கு பேர் கொரோனா வைரஸின் தாக்கத்துக்குள்ளாகவில்லை என முதலாம் கட்ட வைத்திய பரிசோதனையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொரளை வைத்திய ஆராய்ச்சி நிறுவனத்திற்கு அனுப்பப்பட்ட நான்கு பேரின் குருதி மாதிரியில் கொரோனா வைரஸ் தொற்று இல்லையென்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது.

எனினும் முதலாவது கட்ட வைத்திய பரிசோதனைகளை உறுதிப்படுத்த இரண்டாம் கட்ட வைத்தியப் பரிசோதனைகள் இடம்பெறுவதாகவும் அந்த அறிக்கை இன்று மாலை வெளியிடப்படும் எனவும் வைத்தியசாலை வட்டாரங்கள் சுட்டிக்காட்டியுள்ளன.

No comments: