புத்தசாசன மற்றும் மதவிவகாரங்கள் அமைச்சருமான பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ புத்தசாசன, மத விவகாரங்கள் மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சின் முன்னேற்ற நடவடிக்கைகள் தொடர்பான கலந்துரையாடலில் கலந்துகொண்ட அதிகாரிகளுக்கு ஆலோசனை தெரிவிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இதன்போது, இலங்கையில் அமைக்கப்பட்டுள்ள அனைத்து இஸ்லாமிய மத்ரஸா பாடசாலைகளையும் முஸ்லிம் சமய விவகார திணைக்களத்தில் பதிவுசெய்வதுடன் மத்ரஸா பாடசாலைகளில் கற்பிக்கப்படும் பாடத்திட்டங்களை ஒழுங்கமைக்க மேற்கொள்ள தேவையான நடவடிக்கைகளை அதிகாரிகள் மேற்கொள்ளவேண்டும் எனவும் தெரிவித்தார்
மேலும் மத்ரஸா பாடசாலைகளில் கற்பிக்கப்படும் பாடத்திட்டங்கள் தொடர்பாக முறையாக ஆராய்ந்து முஸ்லிம் சமய விவகார அமைச்சு மற்றும் கல்வி அமைச்சு இணைந்து நேர்த்தியான பாடத்திட்டம் ஒன்றை ஏற்படுத்துமாறும் பிரதமர் இதன்போது ஆலோசனை வழங்கியுள்ளார்.

No comments: