News Just In

1/10/2020 05:04:00 PM

அக்கரைப்பற்றில் மாணவியைக் கடத்திய இளைஞருக்கு விளக்கமறியல்!

அக்கரைப்பற்று பிரதேசத்தை சேர்ந்தமாணவி ஒருவரைக் கடத்தி சென்றார் என்ற சந்தேகத்தில் கைது செய்யப்பட்ட இளைஞரை எதிர்வரும் 17ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு அக்கரைப்பற்று நீதிவான் நீதிமன்ற பதில் நீதிவான் இஸ்மாயில் உவைசுர் றகுமான் உத்தரவிட்டார்.

சந்தேக நபரான 18 வயதான இளைஞர் மாணவியின் உறவினர் என்பதுடன், குறித்த மாணவியின் வீட்டுக்கு அடிக்கடி சென்று அவருடன் பழகி அவரை கவரும் வகையில் நடந்து வந்துள்ளார்.

கடந்த சனிக்கிழமை (04.01.2020) மாலை, மாணவியின் பெற்றோருக்கு தெரியாமல் மாணவியை அட்டாளைச்சேனை கடற்கரைக்கு இரவு நேரத்தில் அழைத்து சென்று பின்னர் அட்டாளைச்சேனை மீனோடைக்கட்டு பிரதேசத்துக்கு வந்துள்ளார். 

இது தொடர்பில் தகவலறிந்த சிலர் மாணவியின் பெற்றோருக்கு தெரியப்படுத்தியதைத் தொடர்ந்து மறுநாள் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 03.30 மணியளவில் மாணவியை அவருடைய பெற்றார் வீட்டுக்கு அழைத்துச் சென்றுள்ளனர்.

பின்னர் இவ்விடயம் தொடர்பாக பொலிஸாருக்கு பெற்றோர் முறையிட்டதையடுத்து சந்தேக நபரான இளைஞரை பொலிஸார் கைது செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments: