News Just In

1/10/2020 01:10:00 PM

மட்டு மாநகர சபையினால் இருதயபுரம் மேற்கு வீதிகள் புனரமைப்பு


மட்டக்களப்பு மாநகர சபையினால் இருதயபுரம் மேற்கு 8 ஆம், 13 ஆம் குறுக்கு வீதிகளுக்கு கொங்கிரீட் இடும் புனரமைப்பு பணிகள் வட்டார உறுப்பினர் வி.பூபாலராஜா அவர்களின் வேண்டுகோளின் அடைப்படையில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

மக்களின் நிதி மக்களுக்காகவே எனும் செயற்திட்டத்தின் கீழ் முதல்வர் தி சரவணபவன் அவர்களின் தலைமையில் பல வீதிகள் தார்/காபட் வீதிகளாகவும் மற்றும் கொங்கிரீட் வீதிகளாகவும் புனரமைக்கப்பட்டு வருகின்றது.

இருதயபுரம் 8 ஆம் குறுக்கு (150 மீற்றர்), 13 ஆம் குறுக்கு(150 மீற்றர்) ஆகிய இரு வீதிகள் மட்டு மாநகர நிதி அனுசரணையில் புனரமைக்கப்படுகிறது.

புனரமைப்பு ஆரம்ப வேலைகளை முதல்வர் தி.சரவணபவன், பிரதி முதல்வர் க.சத்தியசீலன் மற்றும் மாநகர உறுப்பினர்கள் சென்று பார்வையிட்டனர்.





No comments: