News Just In

1/10/2020 12:58:00 PM

2020ஆம் ஆண்டின் முதலாவது சந்திர கிரகணம் இன்று!

2020 ஆம் ஆண்டின் முதலாவது சந்திர கிரகணம் இன்று இரவு நிகழவுள்ளது. இன்றிரவு 10.37 மணி முதல் நாளை அதிகாலை 02.42 மணி வரையான காலப் பகுதியில் இலங்கைக்கு சந்திர கிரகணம் தெரியும் என கொழும்பு பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் சந்தன ஜெயரட்ண தெரிவித்துள்ளார்.

இந்த சந்திர கிரகணத்தை "ஓநாய் சந்திர கிரகணம்" என நாசா பெயரிட்டுள்ளது. இந்த ஆண்டில் 4 சந்திர கிரகணம் நிகழ இருப்பதாகவும் நாசா தெரிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

குறித்த சந்திர கிரகணத்தை இலங்கை உள்ளிட்ட ஆசிய நாடுகளில் வெறும் கண்களால் பார்க்க முடியும். கிரகணம் உச்சத்தில் இருக்கும்போது 90 சதவீத சந்திரன் பூமியால் மறைக்கப்படும். இந்த நிகழ்வால் சந்திரனின் ஒளி மங்கும். பிற நாட்களில் காட்சியளிப்பது போல இருக்காது.

இந்த கிரகண காலத்தில் சந்திரன் முற்றிலும் இருளாகவோ அல்லது சிவப்பாகவோ மாறாது என்பது குறிப்பிடத்தக்கது

சூரியனிலிருந்து சந்திரன் ஒளியை பெறுகின்றது இந் நிலையில் சூரியனுக்கும் நிலவுக்கும் இடையே பூமியானது கடந்து செல்லும்போது சந்திரன் ஒளியை பெறுவதனை பூமி தடுக்கிறது . இதனால் ஏற்படும் நிகழ்வே சந்திர கிரகணம் என அழைக்கப்படுகிறது.

No comments: