News Just In

1/11/2020 01:45:00 PM

மட்டக்களப்பில் துப்பாக்கி மீட்பு-இரு சந்தேக நபர்கள் கைது


மட்டக்களப்பு வாழைச்சேனை பொலிஸ் பிரிவில் இன்று காலை ரி-56 ரக துப்பாக்கி ஒன்றுடன் சந்தேகநபர் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளதாக வாழைச்சேனை பொலிசார் தெரிவித்தனர்.

விசேட அதிரடிப்படையினருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து படையினர் மேற்கொண்ட விசாரணையின் போது குறிஞ்சி நகர் கறுவாக்கேணி எனும் இடத்தில் வைத்து குறித்த துப்பாக்கி மற்றும் சந்தேகநபர் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளதாக வாழைச்சேனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்தார்.

இதனையடுத்து பொலிசார் மேற்கொண்ட விசாரணையின் போது மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

இதன்போது ரி-56 துப்பாக்கி ஒன்றும் அதற்கு பயன்படுத்தும் 27 ரவைளும் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் மேற்கொண்டு வருவதாக அவர் மேலும் தெரிவித்தார்.

No comments: