News Just In

1/25/2020 11:19:00 PM

கட்டைபறிச்சான் விபுலானந்த வித்தியாலய இல்ல மெய்வல்லுநர் விளையாட்டு விழா

(யனோபன்)
கெட்டியாபுரபற்று தி/மூ/கட்டைபறிச்சான் விபுலானந்த வித்தியாலயத்தின் 2020 ஆம் ஆண்டுக்கான இல்ல மெய்வல்லுனர் விளையாட்டு இறுதி விழா வியாழக்கிழமை (23) வித்தியாலய விளையாட்டு மைதானத்தில் பாடசாலை முதல்வர் பு.பிரபாகரன் அவர்களது தலைமையில் நடைபெற்றது.

இவ் விளையாட்டு போட்டியானது விளையாட்டு நிகழ்வாக மாத்திரம் அமையாது சமூகத்திற்கு முன் மாதிரியான தொனிப்பொருட்களை முன் நிறுத்தி இடம்பெற்றமை அனைவராலும் பாராட்டப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

இவ் வருடத்திற்கான தொனிப் பொருள் "பொலித்தீன் பாவனை அற்ற இயற்கையின் நண்பர்கள், போதைப் பொருள் பாவனையற்ற சமூகம், டெங்கு ஒழிப்பு" என்பனவற்றை மையமாக வைத்து இல்லங்களின் செயற்பாடுகள் இடம் பெற்றது.

இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக மூதூர் வலயக் கல்வி அலுவலகத்தின் பிரதிக் கல்விப் பணிப்பாளர் ஜனாப்.ஜே.எம்.இக்பால் (முகாமைத்துவம்) அவர்கள் கலந்து கொண்டார் மேலும் பாடசாலை அபிவிருத்திக் குழு உறுப்பினர்கள், பழையமாணவர்கள், பாடசாலை நலன்விரும்பிகள் மற்றும் பெற்றோர்கள் கலந்து சிறப்பித்திருந்தனர்.

No comments: