News Just In

1/28/2020 12:42:00 PM

கொரோனா வைரஸ் தொற்று!? சீனாவிலிருந்து வந்துள்ள இலங்கை மாணவர்கள் இராணுவ முகாமுக்கு!!

கொரோனா வைரஸ் தொற்று தீவிரமாக சீனாவில் பரவிவரும் நிலையில், சீனாவின் வுஹான் மாகாணத்திலிருந்து வந்துள்ள இலங்கையைச் சேர்ந்த மாணவர்கள் அனைவரும் தியத்தலாவையிலுள்ள இராணுவ முகாமுக்கு அனுப்பப்படவுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

குறித்த மாணவர்கள் அனைவரும் அங்குள்ள விசேட வைத்திய நிலையத்தில் 02 வாரங்களுக்கு தங்க வைக்கப்பட்டு அவதானிக்கப்பட்டு உரிய சிகிச்சைகளும் அளிக்கப்படும் என சுகாதார அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.

உயர்கல்விக்காக சீனா சென்றிருந்த இலங்கையைச் சேர்ந்த மாணவர்களில் ஒரு பகுதியினர் நேற்று இலங்கைக்கு அழைத்துவரப்பட்ட நிலையில், இன்றைய தினமும் இரண்டு விமானங்கள் சீனாவுக்கு அனுப்பப்பட்டுள்ளதாக தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

சுகாதார அமைச்சினால் கொரோனா வைரஸ் தொடர்பில் தகவல் அறிந்துகொள்வதற்காக கீழ்வரும் அவசர தொலைபேசி இலக்கங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
071 0107107
011 3071073

No comments: