News Just In

1/13/2020 10:23:00 AM

செட்டிபாளையம் சிவன் ஆலய திருவருள் சங்கத்தின் 80ஆவது அமுத விழா


செட்டிபாளையம் சிவன் ஆலய திருவருள் ஆண்கள் சங்கத்தின் 79ஆவது ஆண்டு நிறைவு விழா கௌரவத் தலைவர் M.பாலகிருஷ்ணன் அவர்களின் தலைமையில் ஆலய முன்றலில் 11 ஆம் திகதி நடைபெற்றது.

ஆசியுரை சிவஸ்ரீ ஜனார்த்தனன் குருக்கள் அவர்களும்,
மாணவர்களின் தேவார பாராயணம் ஓதுதல், சமய பேச்சு போட்டிகள் சமய  சொற்பொழிவு நிகழ்வும் பங்கு பற்றிய மாணவர்களுக்கான பரிசில்கள் விசேட பூசை நிகழ்வும் நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது.

இந்தியாவின் காஸ்மீர் தேசத்தில் அவதரித்து இலங்கையில்   மக்களுக்கு நல்லொழுக்கங்களையும், நற்பண்புகளையும், சமய உணர்வுகளையும் இதர்ம சிந்தனைகளையும் புகட்டி சமூகம் மேன்மையுறுவதற்கு சிறந்த ஒரு வழிகாட்டியாக திகழ்ந்ததுடன் மக்களால் என்றும் போற்றப்படும் வணக்கத்திற்குரிய மகானாகவும் விளங்கிய வணக்கத்திற்குரிய குருமுனி ஸ்ரீலஸ்ரீ சோமேஸ்வரானந்தகிரி சுவாமி வர்களால்  ஆம்பிக்கப்பட்டதே இச் சங்கம் பல அறப்பணிகளை ஆற்றி வருகின்றமை குறிப்பிடத்த்தக்கது.














No comments: