சீனாவிலுள்ள 30 இலங்கை மாணவர்களை நாட்டிற்கு அழைத்து வருவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக இராஜாங்க அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.
அலரிமாளிகையில் நேற்று(செவ்வாய்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார்.
கொரோனா வைரஸ் பரவிச் செல்லும் சீனாவின் வூஹான் நகருக்குள் உள்நுழையவோ அங்கிருந்து வெளியேறுவதற்கோ தடை விதிக்கப்பட்டுள்ளது.
இதன்காரணமாகவே 30 இலங்கை மாணவர்களையும் நாட்டிற்கு அழைத்து வருவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், அங்குள்ள இலங்கை மாணவர்களின் சுகாதார நிலை, உணவு, ஏனையத் தேவைகள் குறித்து பீஜிங் நகரிலுள்ள இலங்கைத் தூதுவராலயம் ஊடாகவும் அதிகாரிகள் தொடர்ந்தும் அவதானித்து வருவதாகவும் அவர் கூறியுள்ளார்.

No comments: