News Just In

12/28/2019 02:16:00 PM

ஆரையம்பதி பாலமுனையில் கரையொதுங்கிய சடலம்


மட்டக்களப்பு ஆரையம்பதி- பாலமுனை கிராமத்தில் பால்வாத்த ஓடை பிரதேசத்தில் சடலம் ஒன்று கரையொதுங்கியுள்ளது. இன்று(28) உருக்குலைந்த நிலையில் பாலமுனை கடற்கரை பிரதேசத்தில் குறித்த சடலம் கரையொதிங்கியுள்ளது.

நாற்பது வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவரின் சடலமே கரையொதுங்கி உள்ளத்துடன், சடலம் அடையாளம் காணப்படாத நிலையில் இது தொடர்பான விசாரணையினை காத்தான்குடி பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.

No comments: