(பிரசாந், கல்லடி நிருபர்)
கல்லடி சரவணா வீதி சந்தியில் ஒரே சமயத்தில் இடம்பெற்ற இரு வேறு விபத்துக்கள்...
கல்முனை பகுதியில் இருந்து மட்டக்களப்பு நோக்கி பயணித்த தனியார் பஸ் வண்டி ஒன்றும் சரவணா வீதியில் இருந்து மட்டக்களப்பை நோக்கி சென்ற கார் ஒன்றும் விபத்துக்குள்ளாகியுள்ளது...
மட்டக்களப்பு நோக்கி பயணித்த brandix நிறுவன பேருந்து அதே திசையில் பயணிக்க வீதியினை கடந்த காருடன் மோதியத்திலேயே இவ் விபத்து ஏற்பட்டுள்ளது.
அதே சமயம் மட்டக்களப்பை நோக்கி ஒரே திசையில் பயணித்த கார் ஒன்றும் மோட்டார் சைக்கிள் ஒன்றும் விபத்துக்குள்ளாகியுள்ளது...
இந்த விபத்து தொடர்பான விசாரனைகளை காத்தான்குடி பொலிசார் மேற் கொள்கின்றனர்...
விபத்தில் எவருக்கும் பெரிய அளவில் பாதிப்பு இல்லை என தெரியவருகிறது.
அதிக வாகனங்கள் பயணிக்கும் புதிய கல்முனை வீதியில் தற்காலத்தில் விபத்துக்கள் அதிகரித்து வருவது குறிப்பிடப்பட வேண்டிய விடயமாகும்.










No comments: