News Just In

12/28/2019 02:09:00 PM

எட்டு சர்வதேச தொடர்களில் விளையாடவுள்ள இலங்கை வலைப்பந்தாட்ட அணி

2020ஆம் ஆண்டில் இலங்கை வலைப்பந்தாட்ட அணி எட்டு சர்வதேச தொடர்களில் விளையாடவுள்ளது. இதற்காக 35 பேர் கொண்ட வலைப்பந்தாட்ட குழுவை இலங்கை வலைப்பந்தாட்ட சம்மேளனம் பெயரிட்டுள்ளது.

அத்துடன் குறித்த அணியை பலப்படுத்தும் நோக்கில் 21 வயதுக்குட்பட்ட மற்றும் 16 வயதுக்கும் உட்பட்ட கனிஷ்ட அணிகளை உருவாக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. எதிர்வரும் பெப்ரவரி மாதம் 20 ஆம் திகதி முதல் 25 ஆம் திகதி வரை புறூணை, கென்யா, ஹெங்கொங் ஆகிய நாடுகளுடன் இடம்பெறும் போட்டிகளில்; இலங்கை அணி மோதவுள்ளது.

இதேவேளை ஏப்ரல் மாதத்தில் மூன்று நாடுகள் இலங்கைக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டு வலைப்பந்தாட்ட போட்டிகளில் பங்கேற்கவுள்ளன. மலாவி அல்லது கென்ய அணிகள் மே மாதம் அளவில் இலங்கைக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டு போட்டிகளில் கலந்து கொள்ளவுள்ளது.

அத்துடன் தென்கொரியாவில் நடைபெறும் ஆசிய வலைப்பந்தாட்ட சம்பியன்ஷிப் தொடரிலும் இலங்கை வலைப்பந்தாட்ட அணி பங்கேற்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments: