News Just In

12/30/2019 01:12:00 PM

உயர்தரப் பரீட்சைப் பெறுபேற்றுச் சான்றிதழ்கள் இன்று வெளியீடு


கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சைப் பெறுபேற்றுச் சான்றிதழ்கள் இன்று முதல் வெளியிடப்படவுள்ளன.

ஒருநாள் சேவையூடாக அல்லது சாதாரண சேவையின் கீழ் சான்றிதழ்களை பெற்றுக்கொள்ள முடியும் என பரீட்சைகள் திணைக்களம் தெரிவிக்கின்றது.

எவ்வாறாயினும் பரீட்சைப் பெறுபேற்றுச் சான்றிதழை கடந்த சனிக்கிழமை முதல் இணையத்தளம் ஊடாக விண்ணப்பிப்பதற்கான வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் குறிப்பிட்டுள்ளார்.

இதன்மூலம் 48 மணித்தியாலங்களில் வீட்டிற்கே பெறுபேறுகளைப் பெற்றுக்கொள்ள முடியும் எனவும் அவர் கூறியுள்ளார்.

வெளிநாடுகளுக்கு அனுப்புவதாயின், ஈ.என்.எஸ் முறைமையைப் பயன்படுத்த முடியும் என பரீட்சைகள் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

இதேவேளை உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகள் தொடர்பான மீளாய்வு விண்ணப்பங்களை எதிர்வரும் 17ஆம் திகதிவரை சமர்பிக்க முடியும் என பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments: