News Just In

12/31/2019 09:59:00 AM

கோர விபத்து- 4 விமானப்படை வீரர்கள் பலி


கொழும்பு - கண்டி பிரதான வீதியின் வரகாபொல, தும்மலதெனிய பகுதியில் இடம்பெற்ற விபத்தில் விமானப் படை உறுப்பினர்கள் நால்வர் உயிரிழந்துள்ளனர்.

இன்று அதிகாலை 4 மணிக்கு முச்சக்கர வண்டி ஒன்றும் கன்டேனர் ரக வாகனம் ஒன்றும் நேருக்கு நேர் மோதிக் கொண்டதில் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

விபத்தில் முச்சக்கர வண்டியில் பயணித்த 4 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர்.

முச்சக்கரவண்டி சாரதிக்கு நித்திரை ஏற்பட்டதன் காரணமாக குறித்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸாரின் ஆரம்ப கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

சம்பவம் தொடர்பில் கன்டேனர் ரக வாகன ஓட்டுனர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் வரகாபொல பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

No comments: