News Just In

12/02/2019 12:45:00 PM

"தமிழ், முஸ்லீம் இனப்பிரச்சினையை தூண்டும் கருணா!"- எம்.எஸ்.சுபையிர் ஜனாதிபதிக்கு கடிதம்


30வருட பயங்­க­ர­வாத யுத்­தத்­துக்குள் அகப்­பட்டு பல்­வேறு இன்­னல்­களை எதிர்­நோக்­கிய வட,கிழக்கு மக்கள் யுத்தம் முடி­வுக்குக் கொண்­டு­வ­ரப்­பட்­டதன் பின்னர் ஐக்­கி­ய­மா­கவும் நிம்­ம­தி­யா­கவும் வாழ்ந்­து­வரும் சூழ்­நி­லையில், தமிழ், முஸ்லிம் மக்­க­ளி­டையே விரி­சலை ஏற்­ப­டுத்தும் வகையில், விநா­ய­க­மூர்த்தி முர­ளி­தரன் செயற்­பட்­டுக்­கொண்­டி­ருக்­கிறார். இவ­ரது செயற்­பா­டு­க­ளினால் தமிழ், முஸ்லிம் இளை­ஞர்கள் தூண்­டப்­பட்டு இன மோதல்கள் இடம்­பெ­று­வ­தற்கும் வாய்ப்­புகள் உள்­ளன. இந்­த­ வி­டயம் குறித்து கிழக்கு மாகாண முன்னாள் அமைச்சர் எம்.எஸ்.சுபையிர் ஜனா­தி­பதி கோத்தபாய ராஜ­ப­க் ஷ­வுக்கு கடிதம் ஒன்­றினை அனுப்பி வைத்­துள்ளார்.

அக்­க­டி­தத்தில் குறிப்­பி­டப்­பட்­டுள்­ள­தாவது,

கடந்த 30 வரு­ட­கா­ல­மாக இடம்­பெற்­று­வந்த யுத்தம் முடி­வுக்குக் கொண்­டு­வ­ரப்­பட்­டதன் பின்னர், நாட்டில் அமைதி, சமா­தானம் ஏற்­பட்டு மக்கள் நிம்­ம­தி­யா­கவும் சந்­தோ­சமா­கவும் வாழ்ந்­து­கொண்­டி­ருந்த வேளையில், நல்­லாட்சி எனும் போர்­வையில் இந்த நாடு சில­ரது கைக­ளுக்குள் சிக்­குண்டு, சின்­னா­பின்­ன­மாக்­கப்­பட்­டது. இவ்­வா­றான சந்­தர்ப்­பத்தில் அண்­மையில் நடை­பெற்ற ஜனா­தி­பதித் தேர்­தலில் நாட்டு மக்கள் தங்­க­ளுக்கு பேரா­த­ரவு தெரி­வித்து ஆட்சி அதி­கா­ரத்­தையும் வழங்­கி­யுள்­ளனர்.

யுத்­த­கா­லத்தில் வட,கிழக்கு மக்கள் எதிர்­நோக்­கிய கஷ்­டங்­க­ளையும் இன்­னல்­க­ளையும் தாங்கள் நன்­க­றி­வீர்கள். இந்த நாட்டை மஹிந்த ராஜ­பக் ஷ பொறுப்­பேற்ற போது அவ­ரது தலை­மையில் பாது­காப்பு செய­லா­ள­ராக இருந்த நீங்கள், சர்­வ­தே­சத்தின் அழுத்­தங்­க­ளுக்கும் அச்­சு­றுத்­தல்­க­ளுக்கும் அடி­ப­ணி­யாது யுத்­தத்­தை முடி­வுக்குக் கொண்­டு­வந்து, இந்த நாட்டில் சமா­தா­னத்தையும் சக­வாழ்­வையும் ஏற்­ப­டுத்தி சரித்­திரம் படைத்­தீர்கள். அதற்­கு­ரிய நன்­றிக்­க­ட­னா­கவே, நாட்டு மக்­களின் பேரா­த­ரவு உங்­க­ளுக்கு கிடைத்­தி­ருக்­கின்­றது.

யுத்­தத்தை முடி­வுக்குக் கொண்­டு­வந்து நாட்டில் சமா­தா­னத்­தையும் அமை­தி­யையும் ஏற்­ப­டுத்­து­வ­தற்கு, பல்­லா­யி­ரக்­க­ணக்­கான இரா­ணு­வத்­தி­ன­ரையும் நாட்­டி­னு­டைய பொரு­ளா­தா­ரத்­தையும் நாம் இழந்­தி­ருக்­கின்றோம். அத­னா­லேதான் எமது நாட்டில் வாழும் மக்கள் அச்­ச­மின்றி சந்­தோ­ச­மா­கவும் நிம்­ம­தி­யா­கவும் வாழக்­கூ­டிய சூழல் உரு­வா­னது. இவ்­வாறு மிகவும் கஷ்­டத்­துக்கு மத்­தியில் பெறப்­பட்ட சமா­தா­னத்தை சீர்­கு­லைப்­ப­தற்கு ஒரு­போதும் அனு­ம­திக்க முடி­யாது.

கிழக்கு மாகா­ணத்தில் வாழும் தமிழ், முஸ்லிம் மக்­களின் இன உறவில் விரி­சலை ஏற்­ப­டுத்தி இந்த நாட்டில் மீண்டுமொரு பிரச்­சி­னையை உரு­வாக்­கு­வ­தற்கு முயற்­சிகள் மேற்­கொள்­ளப்­ப­டு­கின்­றன. இவ்­வா­றான செயற்­பா­டு­க­ளினால் தமிழ், முஸ்லிம் இளை­ஞர்கள் தூண்­டப்­பட்டு எதிர்­கா­லத்தில் இன மோதல்கள் கூட இடம்­பெற வாய்ப்­புள்­ளது. இந்த விடயம் குறித்து அர­சாங்கம் அவ­தானம் செலுத்­து­வது காலத்தின் தேவை­யாகும்.

கடந்த காலங்­களில் தமிழ் மக்­களை பிழை­யாக வழி­ந­டத்தி, விடு­தலைப் புலிகள் இயக்­கத்தில் முக்­கிய பத­வி­களை வகித்து, இந்த நாட்­டுக்கு எதி­ராக யுத்­தத்­தையும் வழி­ந­டத்­திய கருணா அம்மான், முஸ்லிம் தலை­வர்கள் தமி­ழர்­களை குழி­தோண்டிப் புதைக்க வேண்டும் எனும் நோக்கில் செயற்­ப­டு­கின்­றனர் எனக்­கூ­று­வது வேடிக்­கை­யா­க­வுள்­ளது. யுத்த காலத்தில் அநி­யா­யங்­க­ளையும் அட்­டூ­ழி­யங்­க­ளையும் புரிந்து அப்­பாவி மக்­களை கொன்று குவித்து இந்த நாட்டை சீர­ழித்த அவர், சுய­நல அர­சி­ய­லுக்­கா­கவே வீண்­பழி சுமத்­து­கின்றார். அர­சியல் அதி­காரம் ஒன்­றினைப் பெறு­வ­தற்­கா­கவே அவர் இவ்­வாறு செயற்­ப­டு­கிறார்.

ஆயுதம் ஏந்தி எத­னையும் சாதிக்க முடி­யாது என்­ப­தனை உணர்ந்து கொண்ட கருணா அம்மான், அர­சியல் நீரோட்­டத்­துக்குள் வந்து பத­வி­களைப் பெற்று அர­சியல் நட­வ­டிக்­கை­களில் ஈடு­பட்ட போதும் இறு­தியில் தமிழ் மக்­களால் புறக்­க­ணிக்­கப்­பட்டார். அவ­ருக்கு தமிழ் மக்கள் மத்­தியில் எந்­த­வொரு செல்­வாக்கும் கிடை­யாது. அர­சியல் வங்­கு­ரோத்து நிலையில் இருந்து மீண்டு, அர­சியல் அதி­கா­ரத்தைப் பெற்­றுக்­கொள்­வ­தற்­காக தற்­போது இன­வாதம் பேசுகிறார். இவருடைய தீவிர செயற்பாடுகள் நாட்டி னுடைய பொருளாதாரம், மக்களின் சுதந்திரமான செயற்பாடுகள் என்பவற்றை பாதிக்கக்கூடும். அத்துடன், மலர்ந்துள்ள புதிய ஆட்சிக்கும் பெரும் அவப்பெயரை ஏற்படுத்திவிடும்.

எனவே அவரது நடவடிக்கைகள் தொடர் பில் அரசாங்கம் அவதானம் செலுத்த வேண்டும். அத்துடன் சமாதானத்தை குழப்பும் எவராக இருந்தாலும் தராதரம் பாராது நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் எனவும் அக்கடிதத்தில் குறிப்பி டப்பட்டுள்ளது.

No comments: