
மட்டக்களப்பு திருகோணமலை பிரதான வீதியில் சின்ன ஆஸ்பத்திரியின் முன்னாள் இன்று (4) மரம் விழுந்ததில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இன்று காலை வேளையில் காற்று மற்றும் மழையுடனான காலநிலையால் இந்த மரம் விழுந்துள்ளது. யாருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை.
மரம் விழுந்து சற்று நேரத்தில் மாநகர முதல்வரின் வேண்டுகோளுக்கு இணங்க மாநகர சபை மற்றும் வீதி அபிவிருத்தி அதிகார சபையினர் இணைந்து வீதியின் குறுக்காக கிடந்த மரத்தை அகற்றினர்.


No comments: