
ஏ.எச்.ஏ. ஹுஸைன்
மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள 8 களஞ்சிய சாலைகளில் களஞ்சியப்படுத்தப்பட்டிருக்கும் நெல்லை உடனடியாக அரிசியாக்கி லங்கா சதொச நிறுவனத்திற்குகுக் கையளிக்கும் நடவடிக்கை துரிதப்படுத்தப்பட்டிருப்பதாக மாவட்ட அரசாங்க அதிபர் மாணிக்கம் உதயகுமார் புதன்கிழமை 04.12.2019 தெரிவித்தார்.
திறைசேரியின் செயலாளர் எஸ்.ஆர் ஆட்டிகல தலைமையில் நிதியமைச்சில் நடைபெற்ற விசேட கூட்டத்திற்கு அமைய களஞ்சியப்படுத்தப்பட்டுள்ள நெல்லை உடனடியாக பொருத்தமான அரிசி ஆலைகளினூடாக பொது ஒப்பந்த அடிப்படையில் உயர்தரத்தில் அரிசியாக்கி சதொச நிறுவனத்திற்கு வழங்கப்பட வேண்டும் என்ற அறிவுறுத்தலுக்கு அமைய இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அரசாங்க அதிபர் மேலும் தெரிவித்தார்.
இதன்படி மட்டக்களப்பு மாவட்டத்தில் களஞ்சியபடுத்தப்பட்டிருக்கும் சுமார் 1300 மெற்றிக்தொன் நெல் அரிசியாக்கப்படவுள்ளது.
மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள புலிபாய்ந்தகல், மணல்பிட்டி, முள்ளாமுனை, கரடியனாறு, போரதீவு, அரசடித்தீவு, கஐ{வத்தை, களுவாஞ்சிக்குடி ஆகிய 8 நெற்களஞ்சியசாலைகளில் களஞ்சியப்படுத்தப்பட்டுள்ளது.
2018, 2019ஆம் ஆண்டு பெரும்போகங்களில் விவசாயிகளிடமிருந்து நெல் சந்தைபடுத்தல் சபை கொள்வனவு செய்திருந்த நெல்லையே இவ்விதம் அரிசியாக்கி சதொச நிறுவனத்திற்கு ஒப்படைக்கப்படவுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
நெல்லை அரிசியாக்குவதற்குப் பொறுப்பேற்கும் தனியார் அரிசியாலை உரிமையாளர்கள் அரசாங்கத்துடன் இணைந்து பணிகளை செவ்வேன நடைமுறைபடுத்த முன்வர வேண்டும் எனவும் அதிகாரிகள் தமது மேற்பார்வை கடமைகளை சிறப்பாக அமுல் நடத்த உதவ வேண்டும் எனவும் அரசாங்க அதிபர் உதயகுமார் வேண்டுகோள் விடுத்தார்.

No comments: