
இளைஞர் விவகார அமைச்சின் வழிகாட்டலின் கீழ் தேசிய இளைஞர் சேவைகள் மன்றமும் இலங்கை இளைஞர் கழக சம்மேளனமும் இணைந்து நாடளாவிய ரீதியில் நடைமுறைப்படுத்தி வரும் இளைஞர் முகாம் இவ்வருடமும் சகல பிரதேச செயலகப் பிரிவுகளிலும் நடைபெற்று வருகின்றது.
அதன் அடிப்படையில் ஏறாவூர்ப்பற்று இளைஞர் கழக சம்மேளனம இளைஞர் கழக அங்கத்தவர்களுக்கான இளைஞர் முகாம் 29.11.2019 தொடக்கம் 01.12.2019 ஞாயிற்றுக் கிழமை வரை இடம்பெற்ற இவ் இளைஞர் முகாமின் இறுதி நாள் சான்றிதழ்கள் வழங்கும் நிகழ்வு ஏறாவூர்ப்பற்று பிரதேச இளைஞர் சேவை உத்தியோகத்தார் க.அழகுராஜா அவர்களின் வழிநடத்தலில் ஏறாவூர்ப்பற்று இளைஞர் கழக சம்மேளன தலைவர் ஜெ.ஜெயந்தன் அவர்களின் தலைமையில் இடம்பெற்றது.
அதிதிகளாக தேசிய இளைஞர் சேவைகள் மன்ற முன்னால் கிழக்கு மாகாண பணிப்பாளரும் சட்டத்தரணியுமான தவராஜா,தேசிய இளைஞர் சேவைகள் மன்ற தேசிய சம்மேளனப் பிரதிநிதி ந.திவாகர், தேசிய இளைஞர் சேவைகள் மன்ற இளைஞர் பாராளுமன்ற கல்வி அமைச்சர் ம.சுரேஷ்காந்தன்,
மட்டக்களப்பு மாவட்ட காரியாலய மாவட்ட இளைஞர் சேவை உத்தியோகத்தர்களான ஜேசுதாஸன் கலாராணி, நிஷாந்தி அருள்மொழி,கிராம சேவகர் அவர்களும் கலந்து கொண்டதோடு ஏறாவூர்ப்பற்று இளைஞர் கழக சம்மேளன நிருவாக உறுப்பினர்களும் பங்கேற்றிருந்தனர்.
















No comments: