News Just In

12/31/2019 04:20:00 PM

மணிரத்னத்தின் பொன்னியன் செல்வன் படத்தில் இணையும் இலங்கை நடிகர்


இலங்கையில் விருது பெற்ற நடிகர் ஷியாம் பெர்னாண்டோ மணி ரத்னத்தின் பொன்னியன் செல்வன் படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

இவர் சமீபத்தில் தனது முகநூல் பக்கத்தில் தாய்லாந்தில் படப்பிடிப்புக்காக இலங்கை தீவை விட்டு வெளியேறுவதாகக் குறிப்பிட்டிருந்தார்.

இந்நிலையில் பொன்னியின் செல்வன் படத்தில் கோலிவுட் நட்சத்திரங்களான ஜெயம் ரவி, கார்த்தி, ஐஸ்வர்யா லக்ஷமி, விக்ரம், த்ரிஷா, மோகன் ராமன் ஆகியோர் நடிக்கின்றனர்.

அத்தோடு பிரபல பொலிவுட் நடிகை ஐஸ்வர்யா ராயும் அடுத்த ஆண்டு இப்படத்தில் இணைவார் என்று இந்திய ஊடக செய்திகள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில் குறித்த படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கவுள்ளதாக இந்திய ஊடகங்கள் மேலும் தெரிவித்தன

No comments: