News Just In

12/31/2019 05:18:00 PM

காணி அபகரிப்பு தொடர்பாக வியாழேந்திரன் ஊடாக ஜனாதிபதிக்கு கடிதம்!


கிழக்கு மாகாணத்தில் மட்டக்களப்பு திருகோணமலை அம்பாறை மாவட்டங்களில் தமிழர்கள் பெரும்பான்மையாக வாழ்கின்ற பல இடங்களின் தமிழர்களின் பாரம்பரியமான காணிகளை கடந்த ஆட்சி காலத்தில் அதிகாரத்தில் அமர்ந்திருந்த ஒரு சில மாற்று சமூகத்தைச் சேர்ந்த  அரசியல்வாதிகளினால் பொய்யான காணி உறுதிப் பத்திர ஆவணங்கள் தயாரிக்கப்பட்டு அதிகளவான தமிழர்களின் காணிகள் அபகரிக்கப்பட்டடிருற்ததாகவும்.

குறிப்பிட்டு ஏறாவூர்பற்று செங்கலடி பிரதேச சபை உறுப்பினர் அபகரிக்கப்பட்ட இக் காணி உறுதிப்பத்திரங்களை மீண்டும் மறுசீரமைப்பு மீளாய்வு செய்து   தமிழ் மக்களின் காணிகளை தமிழ் மக்களுக்கு வழங்குவதற்காக கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் சதாசிவம் வியாழேந்திரன் அவர்களின் ஊடாக   ஜனாதிபதி அவர்களின் கவனத்தில் கொண்டு செல்லும்படி ஏறாவூர் பற்று பிரதேச சபை உறுப்பினர் விஜயரத்தினம் ஜெயகணோஷ் (பிரபா) அவர்களினால் இன்று பா.உ.S.வியாழேந்திரனிடம் மணுவையும் கையளித்தார்.  



  

No comments: