
மறைந்த தமிழக முதலமைச்சர் எம்.ஜி. இராமச்சந்திரனின் 32வது ஆண்டு நினைவு தினம் யாழில் அனுஸ்டிக்கப்பட்டது.
யாழ்ப்பாணம் கல்வியங்காடு சந்தியில் அமைந்துள்ள எம்.ஜி. ஆரின் உருவச் சிலைக்கு முன்பாக இன்று (செவ்வாய்க்கிழமை) காலை 12 மணியளவில் இந்த நினைவு தின நிகழ்வுகள் இடம்பெற்றன.
இதன்போது இதன் போது சிலைக்கு மலர் மாலை அணிவித்து தீபங்கள் ஏற்றி மலர் தூபி அஞ்சலி செலுத்தப்பட்டது.
தமிழ் தேசியக் கட்சியின் செயலாளர் நாயகமும் வடமாகாண சபையின் முன்னாள் உறுப்பினருமான எம்.கே.சிவாஜிலிங்கம் உட்பட பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

No comments: