News Just In

12/24/2019 01:29:00 PM

கிழக்கு ஆளுநர் தலைமையில் கடற்கரையினை சுத்தப்படுத்தும் வேலை திட்டம்


“சூரியன் உதயமாகும் கிழக்கினை அழகு படுத்துவோம்” எனும் தொனிப் பொருளில் திருகோணமலை நகரத்தினை அழகு படுத்தும் வேலைத்திட்டம் இன்று (செவ்வாய்க்கிழமை) முன்னெடுக்கப்பட்டது.

கிழக்கு மாகாண ஆளுநர் அனுராதா யஹம்பத் தலைமையில் குறித்த திட்டம் ஆரம்பித்து வைக்கப்பட்டது. அதன் முதல் அங்கமாக திருகோணமலை நகர கடற்கரையினை சுத்தப்படுத்தும் வேலை திட்டமானது இன்று இடம்பெற்றது.

திருகோணமலை மாவட்டத்திலுள்ள அரச அலுவலகங்களை சேர்த்த உயர் அதிகாரிகள், உத்தியோகத்தர்கள், முப்படை அதிகாரிகள், சமூக அமைப்புகளின் தலைவர்கள், பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டு கடற்கரையினை சுத்தப்படுத்தும் நடவடிக்கையில் ஈடுபடனர்.

இதன் போது உரையாற்றிய கிழக்கு மாகாண ஆளுநர் அனுராதா யஹம்பத், “சூரியன் உதயமாகும் கிழக்கினை அழகு படுத்துவோம்” எனும் தொனிப்பொருளின் கீழ் மாகாணத்தினை அழகுபடுத்தும் வேலைத்திட்டத்தின் முதலவது அங்கமானது இன்று திருகோணமலை நகரில் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.

மழை காலங்களில் ஆங்காங்கே நீர் தேங்குவதன் காரணமாக டெங்கு நோய் பரவக்கூடிய சாத்தியப்பாடுள்ளது. விடுமுறை காலம் என்பதால் சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகமாகவுள்ளதால் நகரை சுத்தப்படுத்துவதன் மூலமாக இந்த அழகிய நகரை மேலும் அழகு படுத்தவும் டெங்கு நோயிலிருந்து எம்மை பாதுகாத்துக்கொள்ளவும் முடியும்.

இவ்வாறான செயற்திட்டத்தின் மூலம் இன ஐக்கியத்தையும் ஒற்றுமையையும் உருவாக்க முடியும். மேலும் மட்டக்களப்பு , அம்பறை ஆகிய பகுதிகளிலும் இவ்வாறே திட்டங்களை முன்னெடுப்பதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருகின்ற போதிலும் வெள்ளத்தினால் அதனை முன்னெடுக்க முடியாதுள்ளது.

அங்கு சென்று அங்குள்ள நிலைமைகளை நாம் பார்வையிட்டோம். வெள்ள நீரானது வெளியேற்ற மூடியாது காணப்படுகின்றது. அதன்ன முதற்கட்டமாக வெளியேற்றிவிட்டு பின்னர் நகரை சுத்தப்படுத்தும் வேலைகளை முன்னெடுக்க உத்தேசித்துள்ளோம்” என தெரிவித்தார்.

No comments: