News Just In

12/29/2019 08:42:00 AM

விரைவில் ஐக்கிய தேசிய முன்னணியின் பாராளுமன்றக் குழுக் கூட்டம்

ஐக்கிய தேசிய முன்னணியின் பாராளுமன்றக் குழு கூடவிருப்பதாக ஐக்கிய தேசிய கட்சியின் பொதுச் செயலாளர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்தார். 

ஜனவரி 02ஆம் திகதி ஐக்கிய தேசிய முன்னணியின் பாராளுமன்றக் குழு கூடவுள்ளதாக அவர் தெரிவித்தார். பாராளுமன்றம் ஜனவரி மூன்றாம் திகதி கூடியதன் பின்னர் தொடர்ந்து பாராளுமன்ற அமர்வுகள் இடம்பெறக்கூடிய நிலை காணப்படுவதால் எதிர்க்கட்சி என்ற அடிப்படையில் அடுத்தகட்ட செயற்பாடுகள் தொடர்பில் பாராளுமன்றக் குழுக் கூட்டத்தில் ஆராயப்படவிருப்பதாக அவர் குறிப்பிட்டார். 

மார்ச் மாதத்தில் பாராளுமன்றம்  கலைக்கப்பட எதிர்பார்க்கப்படுவதால் ஐக்கிய தேசிய முன்னணியின் எதிர்காலச் செயற்பாடுகள் தொடர்பாக இக்கூட்டத்தில் கவனம் செலுத்தப்படவிருப்பதாகவும் அகில விராஜ் காரியவசம் தெரிவித்தார். 

கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க விடுமுறைக்காக இந்தியா சென்றிருக்கும் நிலையில்  நாடு திரும்பியதன் பின்னரே புதிய செயற்குழுக் கூட்டத் திகதி தொடர்பில் அறிவிக்கப்பட முடியும் என அவர் குறிப்பிட்டார். 

No comments: