News Just In

12/29/2019 09:24:00 AM

திறக்கப்படவுள்ள கந்தளாய் சர்க்கரை தொழிற்சாலை-பலருக்கு தொழில் வாய்ப்புக்கள்

கந்தளாய் சர்க்கரை தொழிற்சாலையை மீண்டும் திறப்பதற்கு அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது.

25 ஆண்டுகளுக்கும் மேலாக மூடப்பட்டிருக்கும் இந்த தொழிற்சாலையை திறப்பதனூடாக ஐயாயிரத்துக்கும் மேற்பட்ட தொழில் வாய்ப்புக்களை உருவாக்க முடிவதுடன், 4 ஆயிரம் மில்லியன் ரூபா வரை சம்பாதிக்க முடியும் என்றும் அரசாங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.

கிழக்கு மாகாண ஆளுனர் அனுராதா ஜஹம்பத் கந்தளாய் சர்க்கரை தொழிற்சாலைக்கு கள ஆய்வினை மேற்கொண்டிருந்தபோதே இது தொடர்பான தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

அடுத்த மூன்று மாதங்களுக்குள் புதிய முதலீட்டாளர்களின் கீழ் சர்க்கரை தொழிற்சாலையை திறக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று இதன்போது அவர் உறுதியளித்துள்ளார்.

No comments: