News Just In

12/31/2019 04:48:00 PM

ஸ்ரீ மாமாங்கேஸ்வரர் கடனுதவிக் கூட்டுறவுச் சங்கத்தினால் வெள்ள நிவாரண விநியோகம்


-ஏ.எச்.ஏ. ஹுஸைன்
சமீபத்திய பெருமழை, வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட வறிய நிலையிலுள்ள குடும்பத்தினருக்கு மட்டக்களப்பு ஸ்ரீ மாமாங்கேஸ்வரர் சிக்கன கடனுதவி கூட்டுறவு சங்கத்தினால் உலருணவு நிவாரணப் பொதிகள் வழங்கி வைக்கப்பட்டுள்ளன.

கடனுதவி கூட்டுறவு சங்க மண்டபத்தில்; சங்கத்தின் தலைவர் எஸ். உதயராஐ; தலைமையில் சிக்கன கடனுதவிக் கூட்டுறவுச் சங்க மண்டபத்தில் திங்கட்கிழமை 30.12.2019 இந்த நிவாரண விநியோகமும் கல்வியில் புலமை காட்டிய மாணவர்களைப் பாராட்டி கௌரவித்து பரிசு வழங்கும் நிகழ்வும் இடம்பெற்றது.

சங்கத்தின் உபதலைவர் சிவலிங்கம் கனகசபை,       செயலாளர் எஸ். நிலோஐpனி, கூட்டுறவு அபிவிருத்தி உத்தியோகத்தர்; கே. மகேஸ்வரன் உள்ளிட்ட அலுவலர்களும் பயனாளிகளும் சங்க அங்கத்தவர்களும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.








No comments: