News Just In

12/24/2019 07:31:00 PM

மட்டக்களப்பு, அம்பாறை மாவட்டங்களுக்கு நிவாரண நிதி உதவி


மட்டக்களப்பு, அம்பாறை மாவட்டங்களில் மக்களுக்கு தேவையான நிதியுதவி இன்று வழங்கப்படவுள்ளதாக மத்திய நிலையத்தின் பணிப்பாளர் சமிந்த பத்திராஜ தெரிவித்துள்ளார்.

சேதமடைந்த வீடுகளுக்கான முதற் கட்ட நிவாரண நிதி அனுராதபுரம், கண்டி, பொலன்னறுவை, புத்தளம் ஆகிய மாவட்டங்களின் பிரதேச செயலாளர்களுக்கு வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

பாதிக்கப்பட்ட பிரதேசங்களை மீண்டும் வழமைக்கு கொண்டுவருவதற்காக 28 லட்சம் ரூபா பிரதேச செயலாளர்களுக்கு வழங்கப்பட்டுள்ளதாகவும் தேசிய அனர்த்த நிவாரண சேவை மத்திய நிலையத்தின் பணிப்பாளர் மேலும் தெரிவித்துள்ளார்.

No comments: