News Just In

12/12/2019 06:07:00 PM

வவுணதீவு சமுர்த்தி அலுவலகத்தினால் குறைந்த வருமானம் பெறும் குடும்பம் ஒன்றிற்கு உதவி


மட்டக்களப்பு - மண்முனை மேற்கு வவுணதீவு பிரதேச சமுர்த்தி அலுவலகத்தினால் குறைந்த வருமானம் பெறும் சமுர்த்தி குடும்பம் ஒன்றிற்கு அவர்களது குடும்ப வருமானத்தை உயர்த்துமுகமாக உதவியளிக்கப்பட்டது.

மண்முனை மேற்கு பிரதேச செயலக சமுர்த்தி அலுவலகத்தில் இன்று வியாழக்கிழமை நடைபெற்ற இந் நிகழ்வின்போது புதுமண்டபத்தடி கிராமத்தைச் சேர்ந்த தெரிவு செய்யப்பட்ட சமுர்த்தி பனாளிக்கு சமுர்த்தி சந்தைப்படுத்தல் திட்டத்தினூடாக சிற்றுண்டி வியாபாரம் மேற்கொள்வதற்கென தள்ளுவண்டி வழங்கிவைக்கப்பட்டது.

இந் நிகழ்வில் சமுர்த்தி தலைமையக முகாமையாளர் கலைச்செல்வி வாமதேவா, திட்ட முகாமையாளர் எஸ்.ரஜிந்தினி, வங்கி முகாமையாளர்களான கே.தில்லையம்பலம், அ.பிரியதர்ஷினி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

No comments: