
மட்டக்களப்பு மட்டிக்கழி சிந்தாத்திரை பாலர் பாடசாலையின் ஒளி விழா நிகழ்வுகள் புன்னைச்சோலை சனசமூகத் தலைவர் ஜெ.டி. ஸ்பெக் தலைமையில் நடைபெற்றது.
பிரதம அதிதியாக மட்டக்களப்பு மாநகர முதல்வர் தி.சரவணபவன் அவர்கள் கலந்து கொண்டதுடன், கௌரவ அதிதிகளாக மாநகர சபை உறுப்பினர் பி.ரூபராஜ், சமூக அபிவிருத்தி உத்தியோகத்தர் அன்பழகன் குரூஸ் ஆகியோரும் கிராம பெரியார்கள் , ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பெற்றார்கள் கலந்துகொண்டனர்.
நிகழ்வில் மாணவர்களின் கலை நிகழ்வுகள், அதிதிகள் உரை, பரிசு வழங்கல் மற்றும் சிறார்களுக்கான பட்டமளிப்பு நிகழ்வும் இடம்பெற்றது.























No comments: