குறித்த பிரதேசத்திலுள்ள சூப் கடைக்கு அருகிலுள்ள கூளாவடி பிரதேசத்தைச் சோந்த குழுவினர் முச்சக்கரவண்டியில் சூப்குடிப்பதற்கு சென்றுள்ளனர் இதன்போது அங்கு அந்த பிரதேசத்தைச் சேர்ந்த குழுவினர் சூப்குடிக்க வந்துள்ளனர்.
இந்த நிலையில் இரு குழுக்களுக்கிடையே இடம்பெற்ற வாய்த்தர்க்கத்தையடுத்து மோதல் ஏற்பட்டது. இதில் 3 பேர் வாள் வெட்டுக்கு இலக்காகி படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் முச்சக்கரவண்டி ஒன்று தீயிட்டு கொளுத்தப்பட்டு முற்றாக சேதடைந்துள்ளது.
இந்த சம்பவத்தையடுத்து அங்கு பதற்ற நிலை ஏற்பட்டதையடுத்து பொலிசார் அங்கு சென்ற நிலையில் மோதலில் ஈடுபட்ட இரு குழுக்களைச் சேர்ந்தவர்கள் தப்பி ஓடியுள்ளனர்.
இந்த மோதல் மதுபோதையில் இடம்பெற்றுள்ளதாக பொலிசாரின் ஆரம்பவிசாரணையில் தெரியவந்துள்ளதுடன் இச் சம்பவத்துடன் தொடர்புடையவர்களை கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக


No comments: