News Just In

11/18/2019 07:29:00 AM

இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் ஜனாதிபதியாக கோட்டாபய ராஜபக்ஸ இன்று பதவிப்பிரமாணம்

இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் 08ஆவது ஜனாதிபதியாக (07ஆவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி) தெரிவு செய்யப்பட்டுள்ள கோட்டாபய ராஜபக்ஸ இன்று திங்கட்கிழமை (18.11.2019) காலை அநுராதபுரம் ஜயசிறி மஹா போதிக்கு அருகாமையில் பதவிப் பிரமாணம் செய்துகொள்ளவுள்ளார்.

இவர் தமது கடமைகளை அநுராதபுரம் றுவான்வெலி மகாசயவிற்கு  அருகாமையில் ஆரம்பிக்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந் நிகழ்வில் சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் தலைவரும் முன்னாள் ஜனாதிபதியும், எதிர்கட்சி தலைவருமான மகிந்த ராஜபக்ஸ உள்ளிட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் பலர் கலந்து கொள்ளவுள்ளனர்.

No comments: