News Just In

11/28/2019 07:26:00 PM

கரடியனாறு இந்து வித்தியாலயத்தில் இடம்பெற்ற முன்பள்ளி பிள்ளைகளுக்கான மாணவர் முகாம்

முன்பள்ளி பிள்ளைகளுக்கான மாணவர் முகாம் அண்மையில் மட்/மமே/கரடியனாறு இந்து வித்தியாலயத்தில்  இடம்பெற்றது.

குறித்த முன்பள்ளி பிள்ளைகளுக்கான மாணவர் முகாமானது மட்டக்களப்பு மேற்கு வல்வி வலய கல்விப்பணிப்பாளர் எஸ்.சிறிதரன் அவர்களின் ஆலோசனை மற்றும் வழிகாட்டலின் கீழ் மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்தின் முன்பள்ளி அபிவிருத்தி உதவிக் கல்விப் பணிப்பாளார் எஸ்.கணேஸ் அவர்களின் பங்குபற்றுதலில் நடைபெற்றது.

சிறப்பாக நடைபெற்ற இந்த மாணவர் முகாம் நிகழ்வில் கலந்துகொண்ட 100 முன்பள்ளி மாணவர்களுக்கு பரிசுப் பொருட்கள் வழங்கி வைக்கப்பட்டன.

No comments: