News Just In

11/09/2019 11:45:00 AM

வந்தாறுமூலையில் இடம்பெற்ற உலக உணவு தின நிகழ்வு

கிழக்குப் பல்கலைக்கழகத்தின் விவசாய பீடமும், மட்டக்களப்பு மாவட்ட விவசாய திணைக்களமும் இணைந்து ஏற்பாடு செய்த உலக உணவு தின நிகழ்வானது வந்தாறுமூலையில் அமைந்துள்ள விவசாய திணைக்கள மட்டக்களப்பு வடக்கு உதவிப் பணிப்பாளரின் காரியாலய வளாகத்தில் வெள்ளிக்கிழமை (08.11.2019) காலை நடைபெற்றது.

இந் நிகழ்விற்கு அதிதிகளாக கிழக்குப் பல்கலைக்கழகத்தின் விவசாய பீட பீடாதிபதி Dr. P.சிவராஜா, மட்டக்களப்பு மாவட்ட  விவசாய திணைக்களத்தின் பிரதிப்பணிப்பாளர் V.பேரின்பராஜா, கிழக்குப் பல்கலைக்கழகத்தின் உயிரியல் தொழில்நுட்ப பீட பீடாதிபதி Dr. K.பிரேமகுமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.

நிகழ்வின் பிரதான அம்சமாக உலக உணவு தினத்தை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்ட கண்காட்சி அதிதிகளால் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

சிறப்பாக இடம்பெற்ற உலக உணவு தின நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட விவசாய திணைக்கள உத்தியோகத்தர்கள், கிழக்குப் பல்கலைக்கழகத்தின் விவசாய பீட உத்தியோகத்தர்கள், பொதுமக்கள் என பலரும் கலந்துகொண்டனர்.

No comments: