வங்காள விரிகுடா கடற்பரப்பில் விருத்தியடைந்த மிகக் பலத்த (Bulbul) புல்புல் சூறாவளியானது வட அகலாங்கு 19.5N இற்கும் கிழக்கு நெடுங்கோடு 87.7E இற்கும் இடையில் மையம் கொண்டுள்ளது என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இது அடுத்த 24 மணித்தியாலங்களில் வடக்கு மேற்கு வங்காளம் (இந்தியா) - பங்களாதேஷ் கரையை நோக்கி நகரக்கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. வட அகலாங்கு 15N – 22N இற்கும் கிழக்கு நெடுங்கோடு 84E - 94E இற்கும் இடைப்பட்ட கடற்பரப்புகளில் கடும் மழை அல்லது இடியுடன் கூடிய மழை, மிகவும் கொந்தளிப்பான கடல், மிகப் பலத்த காற்று போன்றவற்றிற்கான சாத்தியம் உயர்வாகக் காணப்படுகின்றது.
கடலில் பயணம் செய்வோரும் மீனவ சமூகமும் (குறிப்பாக ஆழ்கடல் மீன்பிடிப் படகுகள்) நவம்பர் 11ஆம் திகதி வரை கடல் நடவடிக்கைகளில் ஈடுபடுவதைத் தவிர்த்துக் கொள்ளுமாறும் இவ்விடயம் தொடர்பாக அவதானமாக இருக்குமாறும் வேண்டிக் கொள்ளப்படுகிறீர்கள்.
11/09/2019 10:56:00 AM
"புல்புல்" சூறாவளி கரையை நோக்கி நகரும் சாத்தியம்
Subscribe to:
Post Comments (Atom)

No comments: