News Just In

11/09/2019 10:42:00 AM

தேசிய அடையாள அட்டையின் தகவல்களை உறுதி செய்த கடிதத்தை வாக்களிக்க பயன்படுத்தலாம்

ஆட்பதிவுத் திணைக்களம் வழங்கும் தேசிய அடையாள அட்டைக்கான தகவல்களை உறுதிப்படுத்தும் கடிதத்தை வாக்களிப்பதற்கு பயன்படுத்தலாமென தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

இது தொடர்பாக தேர்தல்கள் ஆணைக்குழு விடுத்துள்ள ஊடக அறிக்கையில் 2019.11.08 வரையில் தேசிய அடையாள அட்டையை பெற்றுக் கொள்வதற்காக ஆட்பதிவு திணைக்களத்திற்கு விண்ணப்பங்கை சமர்ப்பித்துள்ள பிரஜைகளுக்கு 2019.11.16 அன்று நடைபெறவுள்ள ஜனாதிபதி தோர்தலில் வாக்களிப்பதற்கு சுயமாக ஆள் அடையாளத்தை உறுதி செய்வதற்காக பயன்படுத்தக்கூடிய விசேட காகிதாதிகளுடன் அச்சிடப்பட்ட பெயர், முகவரி தேசிய அடையாள அட்டை இலக்கம் மற்றும் புகைப்படத்துடன் கூடிய தேசிய அடையாள அட்டை தகவல்களை உள்ளடக்கிய உறுதி செய்யும் கடிதம் ஒன்றை அந்த திணைக்களத்திடம் பெற்றுக் கொள்ள முடியும் என்றும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வாக்களிப்பு நிலையத்தில் வாக்களிக்கும் பொழுது தற்போழுது ஆள் அடையாளத்தை உறுதி செய்யும் ஆவணமாக தேர்தல்கள் ஆணைக்குழுவினால் ஏற்றுக்கொள்ளப்படும் தேசிய அடையாள அட்டை, செல்லுபடியான கடவுச்சீட்டு, செல்லுபடியான வாகன சாரதி அனுமதிப்பத்திரம், அரசாங்க ஊழியர்களுக்கான ஓய்வூதிய அடையாள அட்டை, முதியோருக்கான அடையாள அட்டை, ஆட்பதிவு திணைக்களத்தினால் வழங்கப்படும் தேசிய அடையாள அட்டை ஆகியவற்றிற்கு மேலதிகமாக இந்த தேசிய அடையாள அட்டை தகவல்களை உறுதி செய்யும் கடிதமும் வாக்களிப்பின் போது ஆள் அடையாளத்தை உறுதி செய்யும் ஆவணம் என்ற ரீதியில் தேர்தல்கள் ஆணைக்குழுவினால் ஏற்றுக்கொள்ளப்படும் என்றும் இதன் மூலம் அறிவிக்கப்படுவதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய வெளியிட்டுள்ள இந்த ஊடக அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments: