News Just In

11/09/2019 10:14:00 AM

தெற்காசிய கராத்தே சுற்றுப்போட்டியில் அக்கரைப்பற்று ராம் கராத்தே சங்க மாணவன் சாதனை!

பங்களாதேசில் இடம்பெற்ற தெற்காசிய கராத்தே சுற்றுப்போட்டியில் இலங்கை சார்பாக கலந்துகொண்ட அக்கரைப்பற்று ராம் கராத்தே சங்கத்தின் மாணவன் சோதீஸ்வரன் ரிசோபன் வெண்கல பதக்கம் வென்று சாதனை படைத்து இலங்கைக்கு பெருமை சேர்த்துள்ளார்.

தெற்காசிய நாடுகள் கலந்து கொண்ட கராத்தே சுற்றுப்போட்டியில் பதக்கம் வென்ற சோதீஸ்வரன் ரிசோபன் அக்கரைப்பற்று பிரதேசத்திற்கும் அவர் கல்வி பயிலும் அக்கரைப்பற்று ஸ்ரீ இராமகிருஸ்ண தேசிய பாடசாலைக்கும் திருக்கோவில் கல்வி வலயத்திற்கும் தேசிய அரங்கில் பெருமை சேர்த்துள்ளார்.

அக்கரைப்பற்று ராம் கராத்தே சங்கத்தின் ஸ்தாபகரும் பிரதம போதனாசிரியர் மற்றும் பயிற்றுவிப்பாளருமான சிகான் கே.கேந்திரமூர்த்தி அவர்களின் மாணவரான சோதீஸ்வரன் ரிசோபன் 2017ஆம் ஆண்டு மலேசியாவில் இடம்பெற்ற கராத்தே போட்டி நிகழ்வொன்றில் இலங்கை சார்பாக கலந்து கொண்டு இரண்டு தங்கம் மற்றும் வெள்ளிப்பதக்கம் ஒன்றினையும் வென்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
அக்கரைப்பற்று ராம் கராத்தே சங்கத்தின் (RKO) ஸ்தாபகரும் பிரதம போதனாசிரியருமான சிகான் கே.கேந்திரமூர்த்தி அவர்களுடன் மாணவன் சோதீஸ்வரன் ரிசோபன்

No comments: